யானைகள் கிராமங்களில் உட்புகுவதை தடுப்பதற்கான விஷேட வேலைத்திட்டம் ஆரம்பம்!

20201121 101627
20201121 101627

வவுனியா மாவட்டத்தில் யானை உள்நுழையும் ஆபத்தான கிராமங்களில் பயிர்களை பாதுகாப்பதற்கும் அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிக்கு அருகாமையில் தேசிமரக்கன்றுகள் அமைக்கும் பணி நேற்றையதினம் (21.11.2020) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்ட கிராமங்களில் 35000 தேசிய மரக்கன்றுகளை வவுனியா மாவட்ட சிவில் பாதுகாப்புத்துறையினர் நாட்டிவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதில் முதற்கட்டமாக றம்பைவெட்டி கிராமத்தில் யானைக்காக அமைக்கப்பட்ட பாதுகாப்பு வேலிக்கு அருகாமையில் சுமார் 72 கிலோமீற்றரில் நேற்றையதினம் 1500 தேசிமரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

இவ் மரநடுகை செயற்பாட்டில் கமாண்டர் ஜெனரல், வவுனியா சிவில் பாதுகாப்பு படை தலைமையக அதிகாரி லெப்டினன்ட் கேணல் சூரியா அஸ்மடலா, வவுனியா வன அதிகாரிகள், சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகள் போன்ற பலரும் கலந்து கொண்டு தேசிய மரக்கன்றுகளை நாட்டி வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.