பேராதனை பல்கலைக்கழகத்தின் நிதிப் பிரிவைச்சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா!

Peradeniya university
Peradeniya university

பேராதனை பல்கலைக்கழகத்தின் நிதிப் பிரிவைச்சேர்ந்த அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தைச்சேர்ந்த அனைத்து ஊழியர்களும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் உபுல் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

பிரதான நிர்வாகக் கட்டடத்தின் அனைத்து பிரிவுகளும் கிருமி நீக்கம் செய்யப்பட்டு, சுகாதாரத் துறையின் ஆலோசனையுடன் ஊழியர்கள் வீடுகளுக்குள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் தொற்று பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி தொடர்பு கொண்டிருந்த 9 பேரும், பேராதனை பல்கலைக்கழகத்தின் சுமார் 40 ஊழியர்களும் நாளையதினம் பீ.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று துணைவேந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.