வலி.மேற்கு, காரைநகர் பிரதேசங்களில் நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தல்!

VideoCapture 20201128 125835
VideoCapture 20201128 125835

சில பிரதேசங்களின் தனிமைப்படுத்தல் நிலையை வார இறுதியில் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவர் இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளை தனிமைப் படுத்தும் செயற்பாடு திங்கட்கிழமை(30) முடிவடைகிறது எனத் தெரிவித்த அவர், தனிமைப்படுத்தலைத் தொடர வேண்டுமா அல்லது அதை அகற்றுவதா என்பது குறித்து கள நிலைமையின் அடிப்படையில் வார இறுதியில் முடிவு எடுக்கப்படும் என்றார்.

இலங்கையில் தொற்று நோயின் நிலை மற்றும் கள முன்னேற்றம் என்பன தினசரி அடிப்படையில் ஆய்வு செய்யப்படுகின்றன என்றார்.

முழு காவல்துறை பிரிவுக்கு மாறாக சில பகுதிகளை மட்டுமே தனிமைப்படுத்தலைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியத்தை கருத்தில் கொள்வதிலேயே அதிகாரிகளின் முக்கிய கவனமுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் குறைந்தது 18 பொலிஸ் பிரிவுகளும் நாட்டின் பிற பிரதேசங்களில் 11 கிராம சேவகர் பிரிவுகளும் நேற்று வெள்ளிக்கிழமை நிலைவரப்படி தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

VideoCapture 20201128 125813
VideoCapture 20201128 125758