எதிர் வரும் 3 நாட்களுக்கு மூடப்படும் காரைநகர் இந்துக் கல்லூரி!

school closed
school closed

காரைநகர் இந்துக் கல்லூரியை 3 நாட்கள் மூடப்படுவதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், எல். இளங்கோவன் அறிவித்துள்ளார். “வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் ஆலோசனைக்கு அமைய நாளை திங்கட்கிழமை தொடக்கம் வரும் புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு காரைநகர் இந்துக் கல்லூரி மூடப்படுகிறது.

காரைநகரில் கொரோனா தொற்று உள்ள ஒருவர் கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருக்கமாகப் பழகிய ஆசிரியர் ஒருவர், காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்பிக்கின்றார். அவர் கடந்த வாரம் பாடசாலைக்குச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் அவரது பீ.சி.ஆர் பரிசோதனை வரும் புதன்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. அன்று அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்தால் மறுநாள் வியாழக்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்படும்” என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.