காலநிலை மாற்றத்தினை கருத்தில் கொண்டு பயிர்க்காப்புறுதியை மேற்கொள்ளுங்கள்-சேதுகாவலர்

625.500.560.350.160.300.053.800.900.160.90 1 15
625.500.560.350.160.300.053.800.900.160.90 1 15

காலநிலை மாற்றத்தினை கருத்தில் கொண்டு விவசாயிகள் பயிர்க்காப்புறுதியை மேற்கொள்ளுங்கள் என வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனத்தின் தலைவர் சேதுகாவலர் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட விவசாய சம்மேளனத்தினால் மேற்கொள்ளப்படும் விவசாயிகளுக்கான பயிர்க்காப்புறுதி திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை குறித்த காப்புறுதி திட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்”

2020 ஆண்டிற்கான காலபோக பயிர்ச்செய்கையானது காலநிலை மாற்றத்தின் அடிப்படையில் மிகவும் அவதானமாக மேற்கொள்ள வேண்டிய ஒரு பகிர்ச்செய்கையாக அவதானிக்க முடிகின்றது.

காலநிலை தொடர்பாக கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுகளின் தரவுகள் அடிப்படையில்இ வவுனியா மாவட்டம் ஏறத்தாழ 52000 ஏக்கர் நெற்செய்கையை மேற்கொள்கிறது எனவும் இவ்வாண்டு அவை சிறிது அதிகரிக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

இதே போன்று 13500 ஏக்கர் உழுந்து பயிர்ச்செய்கையும் ஏனைய உப உணவுகளுக்கான பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும் காலநிலை மாற்றத்தில் சரியான மழைவீழ்ச்சி கிடைக்கவில்லை என்பதாலும் மேலும் விதை பொருளுக்கு தடுப்பாடு நிலவியதாலும் இது வரையில் 32000 ஏக்கர் நெற்செய்கையும் 7000 ஏக்கர்களுக்கு மேலாக உழுந்து செய்கையுமே மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இது தவிர்ந்த சோளம், மிளகாய், பப்பாசி, கச்சான் போன்ற ஏனைய உப உணவு பயிர்ச்செய்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இந்த பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகள் காலநிலை மாற்றத்திலிருந்து தங்கள் பயிர்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

முன்னைய காலங்களில் விவசாயிகள் தங்களது பயிர்ச்செய்கைக்கான காப்புறுதியை அரச காப்புறுதிகளை மாத்திரமே நம்பியிருக்க வேண்டிய நிலமை இருந்தது. தற்போது நாங்கள் சனச காப்புறுதி நிறுவனத்தோடு இணைந்து விவசாய நடவடிக்கைகளை பாதுகாப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டிருக்கிறோம்.

இதன் அடிப்படையில் நெல், உழுந்து, மிளகாய், சோளம், கச்சான், பப்பாசி, வாழை, பெஷன் ஆகிய பயிர்களுக்கும் கால்நடைகளுக்குமான காப்புறுதிகளை வழங்கவிருக்கிறோம்.

இது ஒரு அரச காப்புறுதி அல்லாத தனியார் செயற்பாடு என்பதால் விவசாயிகளுக்கான பல சிரமங்கள் தவிர்க்கப்படுகிறது.

ஒரு விவசாயி இந்த காப்புறுதியைச் செய்யும் போது நாங்கள் அந்த விவசாயி கமக்கார அமைப்பில் அங்கத்தவரா அல்லது அந்த பிரதேசத்தில் விவசாயம் செய்கிறாரா என்பதை அந்த பிரதேச கமக்கார அமைப்பினால் உறுதிப்படுத்திக் கொள்வோம்.

அப்படி உறுதிப்படுத்தும் பட்சத்தில் அவருக்கான காப்புறுதியினை வழங்குவோம். அதன் அடிப்படையில் நெல் 1500, உழுந்து 1600, சோளம் 2250, மிளகாய் 2000 , கச்சான் 1700, பப்பாசி 2300, பஷன் 2050, வாழை 2600 எனும் அடிப்படையிலும் விலங்கு வேளாண்மையில் மாடு அதன் பெறுமதியில் மூன்று வீதமும் ஆடு அதன் பெறுமதியில் நான்கு வீதம் என்பதாக இந்த காப்புறுதிக்கான கட்டணங்கள் அறவிடப்படுகிறது. இது மிகவும் குறைந்த கட்டணமாக காணப்படுகிறது.

எங்கள் புரிந்துணர்வு உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தக் காப்புறுதி செய்யும் விவசாயிகள் எவரும் நிராகரிக்கப்படாமல் அனைவரும் காப்புறுதி செய்து கொள்ள முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காப்புறுதி செய்த பிறகு பயிர்ச்செய்கையில் அழிவுகள் ஏற்ப்படுமாக இருந்தால்இ முதலில் விண்ணப்பதாரி தனது அழிவை கமக்கார அமைப்பிற்கு அறிவிக்க வேண்டும். கமகார அமைப்பால் அந்த குறிப்பிட்ட இடத்திற்கு சிபாரிசு செய்யப்படுகிற பிரதிநிதி ஒருவரும் அந்த விவசாயியும் சனச நிறுவனத்தின் ஒரு பிரதிநிதியும் மாவட்ட சம்மேளனத்தின் ஒரு பிரதிநிதியுமாய் இருந்து நேரடியாக அந்த அழிவை பார்வையிட்டு அந்த அழிவிற்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் வருகின்ற மாசி மாதம் வரையில் அதிகளவு மழைவீழ்ச்சி பதியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவாசாயிகள் தங்கள் பயிர்ச்செய்கையை பாதுக்காவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். எனவே அவர்கள் காப்புறுதியைச் செய்வதன் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இவற்றை வவுனியா மாவட்ட சம்மேளனம் தனித்துச் செய்யவில்லை. இந்த காப்புறுதி தொடர்பாக விவசாயம் சார்ந்த திணைக்களங்கள், வவவுனியா மாவட்ட விவசாய அபிவிருத்தி குழு கூட்டம் என்பவற்றிலும் அறிவித்திருக்கிறோம். அங்கே இவைகள் பட்டியலிடப்பட்டிருக்கிறது.
இந்த காப்புறுதியானது மிகவும் சிறப்பானதாகவும் காலத்திற்கு ஏற்றதாகவும் இருக்கிறது.

இந்த காப்புறுதியைச் செய்வதற்கு உங்கள் பிரதேசத்தில் உள்ள கமக்கார அமைப்புகளில் தொடர்பு கொள்ளுங்கள்.

உழுந்து செய்கையைப் பொறுத்தவரையில்இ காப்புறுதியைச் செய்வதற்கான இறுதிக்காலம் டிசம்பர் மாதம் முதல் வாரமாகவும்இ நெற்பயிர்செய்கைக்கான காப்புறுதியைப் பொறுத்தவரையிலும் அதன் இறுதிக்காலம் டிசம்பர் 31 ஆகவும் இருக்கிறது. அரச காப்புறுதிக்கான காலம் ஏற்கனவே நிறைவடைந்து இருக்கிறது.

இதுவரையில் நாங்கள்இ ஏறத்தாள 600 ஏக்கர்களுக்கான உழுந்து செய்கைக்கும் 100 ஏக்கர்க்கும் குறைவான நெற்செய்கைக்கும் காப்புறுதிகள் வழங்கியிருக்கிறோம். இந்தக் காப்புறுதியினைச் செய்வதனூடாக அழிவுகளில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என தெரிவித்தார்.