வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் வெற்றி!

VideoCapture 20201130 171226
VideoCapture 20201130 171226

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உள்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தவிசாளார் சோ.சுகிர்தனால் இன்று சபையில் முன்வைக்கப்பட்டது.

39 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட போது 30 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உறுப்பினர் ஒருவர் உள்பட 3 பேர் சபைக்கு சமூகமில்லை, அத்தோடு இரண்டு உறுப்பினர்கள் கட்சிகளால் நியமிக்கப்படவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும்,ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா 2 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ள அதே வேளை, அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்துள்ளார்.

இந்த நிலையில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VideoCapture 20201130 171247
VideoCapture 20201130 171247
VideoCapture 20201130 171247 1
VideoCapture 20201130 171247 1