மயிலத்தமடு, மாதவனை பகுதி பண்ணையாளர்கள்வெளியேற்றம்: தமிழ் உணர்வார்கள் அமைப்பின் தலைவர் கவலை!

download 1 25
download 1 25

கிழக்கு மாகாண செயலணியின் செயற்பாடுகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் இருந்து பண்ணையாளர்கள் தொடர்ச்சியாக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில் மக்களும் சிந்திக்க வேண்டுமென தமிழ் உணர்வார்கள் அமைப்பின்தலைவர் க.மோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் இருந்து தமிழ் பண்ணையாளர்கள் பலத்த போராட்டத்தின் பின் கனத்த இதயத்துடன், கண்ணீர் துளியுடன் காணிகளை விட்டு படிப்படியாக வெளியேறி வருகிறார்கள்.

கொங்கிறீட் வீதிக்கும், கிடைக்காத வேலைக்கும் அபிவிருத்தி என்ற மாயையிலே ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளுக்கு மாலை கட்டும் மக்களே எங்களை அறியாமல் நாங்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம் என்பதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

அதிகார வர்க்கம் அவர்களது தரகர்கள் மூலம் உங்களை அபிவிருத்தி எனும் மாயையில் மிதக்கவிட்டு ,விட்டு மட்டக்களப்பு மாவட்டம் 75% தமிழர்கள் என்ற கட்டமைப்பை உடைத்து எமது எதிர்கால இருப்பை உடைத்தெறிய சதி நடக்கின்றது என்பதனை தெரிந்து கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்