முல்லைத்தீவில் வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் வைத்தியசாலையில்!

murippu 12
murippu 12

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட முறிப்பு பகுதியில் 13 வயது உடைய இரண்டு சிறுவர்களுக்கு வலுக்கட்டாயமாக கசிப்பு பருக்கப்பட் ட நிலையில் சிறுவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

நேற்று முந்தினம் (28) அதிகளவான போதைப்பொருள் ஊட்டப்பட்டமையினால் இரண்டு சிறுவர்களும் சுயநினைவு அற்ற நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

வலுக்கட்டாயமாக சிறுவர்களுக்கு கசிப்பு பருக்கியமை தொடர்பாக முள்ளியவளை காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள அதேவேளைஇரண்டு சிறுவர்களுடைய பெற்றோர்கள் இந்த முறைப்பாட்டை செய்துள்ளனர்

இதனுடன் தொடர்புடைய மேலும் பலர் (சுமார் 8 பேர்) உள்ளதாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தெரிவித்துள்ளனர்.இவர்கள் கைதுசெய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என சிறுவர்களின் பெற்றோர்கள் கோரியுள்ளனர்

குறித்த சிறுவன் ஒருவனின் பெற்றோர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் குறித்த முறிப்பு இந்த கள்ளச்சாராயத்தினால் காடையர்கள் மரக்கும்பல்கள் ,வாள்வெட்டுக்காரர்களும் அதிகரித்து காணப்படுகின்றனர் இதனால் ஊருக்கு செல்வதற்கு பயமாக உள்ளது சொல்லியிருக்கிறார்கள் கவனமா இரு வெட்டுவன் கொத்துவன் என எனக்கு பயமாக உள்ளது.

எனது உயிருக்கும் எனது குடும்பத்தின் பாதுகாப்புக்கும் இந்த அரசாங்கம் உத்தரவாதம் தர வேண்டும் இந்த அதிகாரிகளும் எனக்கு தர வேண்டும் என்றார்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் தொகையில் அரைவாசிக்கு அதிகமாக இராணுவமும் காவல்துறையும் உள்ள நிலையில் மாவீரர் தினம் மற்றும் நினைவேந்தல்கள் போன்ற தமிழ் மக்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க துடிக்கின்றனரே தவிர தமது கடமைகளான சட்டவிரோத செயல்கள் இயற்கை அழிவுகளை வேடிக்கை பார்ப்பதோடு அதற்க்கு துணைபோய்வருவதாக பல குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

murippu 13
murippu 13
murippu 12
murippu 12
murippu 8
murippu 8
murippu 7
murippu 7
murippu 4
murippu 4