இன்றும் கொரோனா தாக்கத்தால் இருவர் பலி! பலியெடுப்பு 118 ஆக உயர்வு!!

445831c2 corona
445831c2 corona

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்றிரவு அறிவித்தார்.

இதன்படி நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் இன்றும் 503 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 987 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 17 ஆயிரத்து 560 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 309 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.