கோத்தாவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கவுள்ள மைத்திரிபால சிறிசேன

2
2

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இறுதியில் கோத்தபாயவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதோடு, பொதுஜன பெரமுனவோடு இணைந்து பரந்துபட்ட கூட்டணியை ஏற்படுத்துவார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,
நான் ஆரம்பத்திலிருந்தே சுதந்திரக்கட்சியைச் சேர்ந்தவன். சந்திரிக்காவின் தீர்மானங்களால் அன்று கட்சியை விட்டுச் சென்றிருந்தாலும் மிக சொற்ப காலத்திலேயே மீண்டும் எனது கட்சிக்கு திரும்பி விட்டேன்.
தற்போது மிகுந்த கவலையுடன் அக்கட்சியில் இருந்து வெளியேறியுள்ளேன். ஆனால் சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மை தற்போது பொதுஜன பெரமுனவில்தான் இருக்கின்றது.
பெயர் வேறுபட்டாலும் உண்மையான சுதந்திரக் கட்சியில்தான் நான் இணைந்துள்ளேன். சுதந்திரக் கட்சியினர் நிபந்தனைகளை கைவிட்டு பொதுஜன பெரமுனவுடன் இணைய வேண்டும். அதுவே அவர்களுக்குள்ள ஒரே தெரிவு.
எனினும், இறுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோத்தபாயவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதோடு, பொதுஜன பெரமுனவோடு இணைந்து மகிந்த ராஜபக்ஸவுடன் பரந்துபட்ட கூட்டணியை ஏற்படுத்துவார் என குறிப்பிட்டுள்ளார்.