2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது இந்திய அணி.

8
8

சுற்றுலா இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது.
இதில் நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியானது கிங்ஸ்டன் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 416 ஓட்டங்களை குவித்தது.
இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 117 ஓட்டங்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 168 ஓட்டங்களை எடுத்திருந்த போது தமது ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது.
468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 210 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து அணி தோல்வியை தழுவியது.
ஆட்டநாயகனாக ஹனுமா விகாரி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 120 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடம் பிடித்துள்ளது. அடுத்த இடங்களில் நியூசிலாந்து (60), இலங்கை (60), ஆஸ்திரேலியா (32), இங்கிலாந்து (32) அணிகள் உள்ளன.