நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறும் மே.தீவுகள்!

EpA5uZaXcAABphU 720x450 1
EpA5uZaXcAABphU 720x450 1

நியூஸிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி பதிலுக்கு முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில் ஜோசுவா டா சில்வா 2 ஓட்டங்களுடனும் ச்சீமர் ஹோல்டர் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், மேற்கிந்திய தீவுகள் அணி 336 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

வெலின்டன் மைதானத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸிற்காக 460 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஹென்ரி நிக்கோல்ஸ் 174 ஓட்டங்களையும் வாக்னர் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், செனோன் கெப்ரியல் மற்றும் அல்சார்ரி ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ச்சீமார் மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கியுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 124 ஓட்டங்களை பெற்றுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில், கிரைஜ் பிரத்வெயிட், ரோஸ்டன் சேஸ், அல்சார்ரி ஜோப் ஆகியோர் தலா ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தனர்.

ஜோன் கெம்பல் ஷம்ரா புரூக்ஸ் ஆகியோர் தலா 14 ஓட்டங்களையும் டேரன் பிராவோ 7 ஓட்டங்களையும் ஜேர்மைன் பிளக்வுட் 69 ஓட்டங்களையும் ஜேஸன் ஹோல்டன் 9 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், கெய்ல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளையும் டிம் சவுத்தி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இன்னமும் இரண்டு விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாவது நாளை, முதல் இன்னிங்ஸிற்காக மேற்கிந்திய தீவுகள் அணி நாளை தொடரவுள்ளது.