விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா, டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம்!

202012202259041604 Tamil News DDCA name Virat Kohlis childhood coach Rajkumar Sharma as SECVPF
202012202259041604 Tamil News DDCA name Virat Kohlis childhood coach Rajkumar Sharma as SECVPF

முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் ராஜ்குமார் ஷர்மா. விராட் கோலி சிறுவனமாக இருக்கும்போது ராஜ்குமார் ஷர்மா பயிற்சி அளித்துள்ளார். இந்த நிலையில் ராஜ்குமார், டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

55 வயதாகும் ராஜ்குமார் துரோணாச்சார்யா விருதை 2016-ல் வென்றுள்ளார். டெல்லி சீனியர் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்துள்ளார். இந்திய அணிக்காக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.