ஒரு ஓட்டத்தில் இரட்டை சதத்தை தவறவிட்ட டூ ப்ளஸ்ஸிஸ் !

1609168484 sl sa 2
1609168484 sl sa 2

சுற்றுலா இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா அணி 621 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

தென்னாபிரிக்கா அணி சார்பாக அதிரடியாக துடுப்பெடுத்தாடிய டூ ப்ளஸ்ஸிஸ் 199 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் விஷ்வ பெர்ணான்டோ மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதன்படி, இலங்கை அணியை விட 225 ஓட்டங்கள் முன்னிலையில் தென்னாபிரிக்க அணி உள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இலங்கை அணி சார்பில் தினேஷ் சந்திமால் 85 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 79 ஓட்டங்களையும், தசுன் சானக்க 66 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 49 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொண்டனர்.

பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு36 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது