லா லிகா கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி வெற்றி!

201901260213345985 Copa America FootballIn the easiest sectionBrazil team SECVPF
201901260213345985 Copa America FootballIn the easiest sectionBrazil team SECVPF

பிரபலமான லா லிகா கால்பந்து தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது. வெற்றிக்குரிய கோலை 20-வது நிமிடத்தில் லூயிஸ் சுவாரஸ் அடித்தார்.

நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட்- எல்ச்சி அணிகள் இடையிலான மற்றொரு ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. புள்ளி பட்டியலில் அட்லெட்டிகோ மாட்ரிட் 35 புள்ளிகளுடன் முதலிடத்திலும், ரியல்மாட்ரிட் 33 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன.