மன்செஸ்டர் யுனைடெட் கழக அணியின்வீரர் எடின்சன் கவானிக்கு மூன்று போட்டிகளில் விளையாட தடை!

201231121814 03 edinson cavani ban fa spt intl exlarge 169 720x450 1
201231121814 03 edinson cavani ban fa spt intl exlarge 169 720x450 1

மன்செஸ்டர் யுனைடெட் கழக அணியின் முன்கள வீரரான எடின்சன் கவானிக்கு ஆங்கில கால்பந்து சங்கம் மூன்று போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

அத்துடன் கவானிக்கு 100,000 பவுண்டுகள் (136,500 டொலர்கள்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மற்றும் கால்பந்து சங்க விதிகளை மீறியதாக ஒப்புக்கொண்ட பிறகு இரண்டு மணிநேர நேருக்கு நேர் ஒன்லைன் கல்விப் படிப்பையும் முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

கறுப்பின மக்களுக்கு எதிரான ஸ்பானிஷ் வார்த்தையான ‘நெக்ரிட்டோ’ என்ற வார்த்தையை சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதற்கு பிறகு அவருக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.