இலங்கை பயணம் செய்யும் இங்கிலாந்து அணி வீரர்கள் எவருக்கும் கொரோனா இல்லை!

joe root england 5223375 720x450 1
joe root england 5223375 720x450 1

இலங்கை புறப்படுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில், எவருக்கு தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா ரைவஸ் தொற்று காரணமாக கடந்த வருடம் மார்ச் மாதம் நடைபெற இருந்த இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தத் தொடர் எதிர்வரும் 14ஆம் திகதி தொடங்குகிறது. இதற்காக இங்கிலாந்து அணி வீரர்கள் நாளை இலங்கை புறப்படுகின்றனர். புறப்படுவதற்கு முன் கொரோனா பரிசோதனையில் அனைவரும் தகுதி பெற வேண்டும்.

இன்று அவர்களுக்கான கொரோனா பரிசோதனை முடிவுகள் கிடைத்தது. இதில் எவருக்கும் தொற்று இல்லை என உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவரும் புறப்படுகின்றனர்.

இலங்கையில் குறிப்பிட்ட நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்த பின் அவர்கள் விளையாட தொடங்குவார்கள்.

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, எதிர்வரும் 14ஆம் திகதி காலி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.