கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை- கெயில்!

chris gayle1 1598431047
chris gayle1 1598431047

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் எண்ணம் எதுவும் தற்போது இல்லை என்று யுனிவர்ஸ் பாஸ் என்றழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்.

ஆகவே, 45 வயதுக்கு முன்னர் கிரிக்கெட்டிலிருந்து விலக வாய்ப்பே இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்னும் இரண்டு உலகக் கிண்ண போட்டிகளில் விளையாட வேண்டியிருப்பதாக சுட்டிக்காட்டிய கிறிஸ் கெய்ல்,வயது என்பது தன்னைப் பொறுத்தவரை வெறும் எண்ணிக்கை தான் என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இவ்வாண்டு நடைபெறவிருக்கும் இருபது ஓவர் உலகக் கிண்ணம் மற்றும் அவுஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் தொடர் ஆகியவற்றில் விளையாடும் நாளை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளதாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.