இலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கொரோனா!

201712111436147252 England players should know how to behave Moeen Ali on Ben SECVPF
201712111436147252 England players should know how to behave Moeen Ali on Ben SECVPF

இலங்கையுடனான டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்த இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர் மொயீன் அலி கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையுடன் எதிர்வரும் 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து அணி நேற்று இலங்கை வருகை தந்திருந்தது.

இந்நிலையில் அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இவ்வாறு மொயீன் அலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் அவர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.