டேவிட் வார்னர் அணியில் இருந்தால் எப்போதுமே நாங்கள் வலுவான அணி- டிம் பெய்ன்!

513005
513005

ஆஸ்திரேலியா – இந்தியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றது.

3-வது டெஸ்ட் நாளை சிட்னியில் தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா தொடரை இழக்காது. இதனால் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் முன்னணி வகிக்க விரும்பும்.

முதல் இரண்டு போட்டிகளில் வார்னர் விளையாடவில்லை. இந்த போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. டேவிட் வார்னர் அணியில் இருந்தால் எப்போதுமே நாங்கள் வலுவான அணி என்று டிம் பெய்ன் தெரிவித்துள்ளார்.

டேவிட் வார்னர் குறித்து டிம் பெய்ன் கூறுகையில் ‘‘டேவிட் வார்னர் அணியில் இடம்பிடித்து, களம் இறங்கி விளையாடினால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அவர் மூலம் வரும் ரன்கள், அல்லது எனர்ஜி மூலம் அவர் அணியில் இருக்கும்போதெல்லாம் ஆஸ்திரேலியா அணி சிறந்த அணியாக திகழும்.

மார்னஸ் லாபஸ்சேன் மற்றும் ஸ்மித்துடன் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை பாதுகாப்பார். எதிரணி பந்து வீச்சாளர்கள் சற்று சோர்வடையும்போது மற்ற வீரர்கள் பேட்டிங் செய்ய வருவது சாதகமாக இருக்கும். ஆகவே, டேவிட் வார்னர் எங்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பாளராக இருப்பார்’’ என்றார்.