வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் கங்குலி!

ganguly bcci 660x450 101419040058
ganguly bcci 660x450 101419040058

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், பி.சி.சி.ஐ.யின் தலைவருமான சவுரவ் கங்குலி கொல்கத்தாவின் உட்லேண்ட்ஸ் வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இந் நிலையில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய கங்குலி, தனக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், தான் முற்றிலும் நலமாகவுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இலகுவான மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் மூன்று அடைப்புகளில் ஒன்று ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை மூலம் நீக்கப்பட்டது.

எவ்வாறெனினும் கங்குலியின் உடல் நலம் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்தும் விழப்புடன் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 02 ஆம் திகதி கொல்கத்தாவில் அமைந்துள்ள தனது வீட்டில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது மார்பு வலி, தலையின் கனம், வாந்தி மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றினால் பாதிப்படைந்த நிலையில் கொல்கத்தா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.