ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெஹன் ஜெயசூரியா!

18
18

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர் ஷெஹன் ஜெயசூரியா இலங்கை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

29 வயதான ஷெஹன் ஜெயசூரியா தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ள நிலையிலேயே அவர் இலங்கை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஷெஹன் ஜெயசூரியா 12 ஒருநாள் மற்றும் 18 இருபதுக்கு : 20 போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.