விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு பெண் குழந்தை!

pic 1598523053
pic 1598523053

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை திருமணம் செய்து கொண்டார். அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கும் செய்தியை விராட் கோலி ஐபிஎல் போட்டிக்காக துபாய் சென்றிருந்தபோது தெரிவித்திருந்தார்.

ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். அனுஷ்கா ஷர்மாவுக்கு குழந்தை பிறக்க இருப்பதால் முதல் டெஸ்ட் முடிந்தபின், இந்தியா திரும்பினார். குழந்தை பிறக்கும்போது மனைவியின் அருகில் இருக்க வேண்டும் என விரும்பினார். பிசிசிஐ விடுமுறை எடுக்க அனுமதி அளித்தது.

இந்த நிலையில் விராட் கோலி- ஆனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு இன்று மதியம் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.