இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்சிக் குழாத்தில் இருந்து விலகிய சுந்தரராஜ் நிரேஷ்!

xxxx spo ocr l soccer generic stock 0016
xxxx spo ocr l soccer generic stock 0016

இலங்கை தேசிய கால்பந்தாட்ட பயிற்சிக் குழாத்தில் இடம்பெற்ற சோண்டர்ஸ் கழக வீரர் சுந்தரராஜ் நிரேஷ் தனது சுயவிருப்பின் பேரில் இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் மற்றும் அணி முகாமைத்துவம் ஆகியவற்றிடம் அனுமதியைப் பெறாமல் வெளியேறியுள்ளார்.

அவருக்குப் பதிலாக சீ ஹோக்ஸ் கழக வீரர் அசேல மதுஷானை தேசிய பயிற்றுநரும் தொழில்நுட்ப பணிப்பாளருமான அமிர் அலாஜிக் தெரிவு செய்துள்ளார். இவர் பி.சி.ஆர் பரிசோதனையின் பின்னர் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

இதேவேளை ஒழுக்காற்று விதிகளின் கீழ் சுந்தரராஜ் நிரேஷை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் விசாரணைக்கு அழைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.