மும்பை சிட்டி- ஐதராபாத் எப்.சி. அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் கோல் இன்றி டிராவில் முடிவு!

202004181439212059 Football This Week Belarus Premier League SECVPF
202004181439212059 Football This Week Belarus Premier League SECVPF

11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு அரங்கேறிய மும்பை சிட்டி- ஐதராபாத் எப்.சி. அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் கோல் இன்றி (0-0) டிராவில் முடிந்தது.

11-வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணி 8 வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வி என்று 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. இன்றைய லீக் ஆட்டங்களில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.-நார்த் ஈஸ்ட் யுனைடெட் (மாலை 5 மணி), எப்.சி.கோவா- ஏ.டி.கே. மோகன் பகான் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.