மீண்டும் தோல்வியடையும் நிலையில் பாகிஸ்தான் அணி

jasir sha
jasir sha

அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் யாசிர் ஷாவின் சதத்துடன் 300 ஓட்டங்களை கடந்தது.

அவுஸ்ரேலிய அணி 3 விக்கட் இழப்பிற்கு 589 ஓட்டங்களை பெற்றுக்கொண்டு ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. நேற்றைய 2ம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இன்றைய 3ம் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 302 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

துடுப்பாட்டத்தில் யாசிர் ஷா 113 ஓட்டங்களையும், பாபர் அசாம் 97 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் மிட்சல் ஸ்டார் 6 விக்கட்டுக்களையும், பட் கம்மின்ஸ் 3 விக்கட்டுக்களையும், ஹசில் வூட் 1 விக்கட்டினையும் வீழ்த்தினர்.

287 ஓட்டங்கள் பின்தங்கியிருந்த பாகிஸ்தான் அணியை மீண்டும் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்டது. அதன்படி மீண்டும் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 3ம் நாள் ஆட்டநேர முடிவில் 39 ஓட்டங்களுக்கு 3 விக்கட்டுக்களை இழந்தது.

2 நாட்கள் மீதமுள்ள நிலையில் அவுஸ்ரேலிய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் காணப்படுகின்றது.