நியூசிலாந்து- இங்கிலாந்து டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு

eng vs nz 0
eng vs nz 0

நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

நியூசிலாந்து தனது முதலாவது இன்னிங்ஸில் 375 ஓட்டங்கயையும், இங்கிலாந்து தனது முதலாவது இன்னிங்சில் 476 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் இன்றைய இறுதி நாள் ஆட்டத்தில் 2வது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் மழையால் குறுக்கிட்டமையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டு வெற்றி தோல்வியின்றி நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த டெஸ்டில் மொத்தம் 5 சதங்கள் பெறப்பட்டுள்ளது.

நியூசிலாந்து தரப்பில்
1. டொம் லதம் 105 ஒட்டங்கள்
2. வில்லியம்சன் 104 ஒட்டங்கள்
3. டெய்லர் 105 ஒட்டங்கள்

இங்கிலாந்து தரப்பில்
4. பேர்னஸ் 101 ஒட்டங்கள்
5. ஜோரூட் 226 ஒட்டங்கள்

ஆட்டநாயகனாக ஜோரூட் தெரிவு செய்யப்பட்டார்.

2வது போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தமையினால் நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதேவேளை 20 ஓவர் தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.