அவுஸ்திரேலிய ஓபன் தொடரின் முதல் எட்டு நாட்களுக்கு அன்றாடம் 30 ஆயிரம் பார்வையாளர்களுக்கு அனுமதி!

image 750x 5fdc2621cd380
image 750x 5fdc2621cd380

எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய ஓபன் போட்டிகளுக்கு அன்றாடம் 25,000 முதல் 30,000 வரை பார்வையாளர்களை அனுமதிக்கு போட்டி ஏற்பாட்டாளர்களின் திட்டங்களுக்கு விக்டோரிய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

தொடரின் முதல் எட்டு நாட்களுக்கு அன்றாடம் 30 ஆயிரம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும், காலிறுதி ஆரம்பமானதன் பின்னர் அந்த எண்ணிக்கை 25 ஆயிரமாக குறைக்கப்படும்.

இவ்வாறு போட்டியை பார்வையிட அனுமதிக்கப்படும் பார்வையாளர்கள் கடுமையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறை அமைச்சர் மார்ட்டின் பாக்குலா சனிக்கிழமையன்று இந்த செய்தியை உறுதிப்படுத்தினார்.

வழக்கமான பார்வையாளர்களின் எண்ணிக்கையில் இது 50 சதவீதமாகும். எனினும் இக் கூட்டம் அவுஸ்திரேலிய ஓபனில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.