பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மீண்டும் சாம்பியன் ஆகிய சிட்னி சிக்சர்ஸ்!

Eti3EtQVIAAjHxE
Eti3EtQVIAAjHxE

பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது.

8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி தொடரில் சிட்னியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சிட்னி சிக்சர்ஸ், முன்னாள் சாம்பியனான பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை சந்தித்தது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சிட்னி சிக்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 188 ஓட்டங்களை குவித்தது.

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜேம்ஸ் வின்ஸ் 60 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 95 ஓட்டங்களை சேர்த்து ஆட்டம் இழந்தார்.

பின்னர் 189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 161 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

இதனால் சிட்னி சிக்சர்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது.

சிட்னி சிக்சர்ஸ் அணி வீரர்கள் ஜேம்ஸ் வின்ஸ் ஆட்டநாயகன் விருதையும், ஜோஷ் பிலிப் தொடர்நாயகன் விருதையும் கைப்பற்றினார்கள்.