ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக சஞ்சய் பாங்கர் நியமனம்!

202102111255383708 Tamil News Tamil news Sanjay Bangar became batting advisor of RCB SECVPF
202102111255383708 Tamil News Tamil news Sanjay Bangar became batting advisor of RCB SECVPF

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே அந்த அணியின் பயிற்சி குழுவில் அங்கம் வகிக்கும் மைக் ஹெஸ்சன் (அணி இயக்குனர்), சைமன் கேடிச் (தலைமை பயிற்சியாளர்), ஸ்ரீதரன் ஸ்ரீராம் (பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர்), ஆடம் கிரிப்பித் (பந்து வீச்சு பயிற்சியாளர்), ஷங்கர் பாசு (உடற்தகுதி பயிற்சியாளர்) ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார். 5 ஆண்டுகள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு உள்ள 48 வயதான சஞ்சய் பாங்கர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.