டெக்போல் விளையாட்டு வவுனியாவில் அறிமுகம்!

IMG 033dc38b917a4b1bfdf897c9fe0bab9f V
IMG 033dc38b917a4b1bfdf897c9fe0bab9f V

இலங்கை விளையாட்டு துறை அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டான டெக்போல் விளையாட்டு வவுனியாவில் அறிமுகம் செய்யப்பட்டதோடு இவ்விளையாட்டுக்கான சம்மேளனமும் ஆரம்பிக்கப்பட்டது.

வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், டெக்போல் சம்மேளனத்தின் வவுனியா இணைப்பாளர் அன்று அன்ஸலி ஆகியோர் முன்னிலையில் இந்த சம்மேளனம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திரேஸ்குமார், நகரசபை தலைவர் கௌதமன், மற்ற விளையாட்டு துறை சார்ந்தவர்கள், விளையாட்டு கழகங்களை சார்ந்தவர்கள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

டெக்போல் விளையாட்டானது ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடப்பட்டு வருவதோடு உலக கிண்ண போட்டிகளாகவும் விளையாடப்பட்டு வருகிறது.

இதேவேளை 2022 ஆம் ஆண்டு முதல் இலங்கை தேசிய விளையாட்டு போட்டிகளுக்குள்ளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.