கிரேக்க வீரர் மைக்கேல் பெர்வோலராகிஸுக்கு கொரோனா!

b93f6100 6e36 11eb bbcb 054c970c7d19
b93f6100 6e36 11eb bbcb 054c970c7d19

மெல்போர்னில் நடந்த ஏடிபி கோப்பையைத் தொடர்ந்து, பெப்ரவரி 9 ஆம் திகதி அவுஸ்திரேலியாவ‍ை விட்டு வெளியேறுவதற்கு முன்பு மைக்கேல் பெர்வோலராகிஸ் கொரோனா தொற்றுக்கு எதிர்மறையை பரிசோதித்ததாக அவுஸ்திரேலிய டென்னிஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும் தற்சமயம் மைக்கேல் பெர்வோலராகிஸ், இன்ஸ்டாகிராம் பதிவில் அவுஸ்திரேலியாவிலிருந்து 24 மணி நேர பயணத்திற்குப் பிறகு தென்னாபிரிக்காவில் மேற்கொண்ட சோதனை முடிவுகளில் தான் கொரோனா தொற்றுக்கு நேர்மறையாக பரிசோதனை மேற்கொண்டதாகவும், தற்போது தனிமைப்படுத்தும் வசதியில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தற்போது ஏடிபி தரவரிசையில் 463 ஆவது இடத்தில் உள்ள பெர்வோலராகிஸ், அவுஸ்திரேலியாவில் இருந்தபோது கிரேக்கத்திற்காக இரண்டு போட்டிகளில் விளையாடினார்.