தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 20 க்கு 20 போட்டியில் 4 விக்கட்டுக்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி!

pakistan team size 1 jpg
pakistan team size 1 jpg

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரின் மூன்றாவதும், இறுதியுமான 20 க்கு 20 போட்டியில் பாகிஸ்தான் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்துடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில், 165 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியின் வெற்றியிலக்கை கடந்தது.

இதற்கமைய, மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரினை 2க்கு 1 என்ற அடிப்படையில் பாகிஸ்தான் அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.