ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி ஆரம்பம்

24
24

5 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சம்பியன்ஸிப் ஆஷஸ் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகிக்கின்றது. இந்நிலையில் இத்தொடரின் 4வது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்துள்ளது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி 44 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. துடுப்பெடுத்தாட்டத்தில் லபுஸ்ஸேன் 67 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் 60 (ஆட்டமிழக்காது) ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஸ்டுவர்ட் புரோட் 2 விக்கட்டுக்களையும் கிரெய்க் ஓவர்டன் 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர். போட்டியின் 2வது நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் 1வது நாள் ஆட்டம் 44வது ஓவரில் மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.