ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸில் உலகின் முன்னணி வீரரான ரபேல் நடால் தோல்வி!

201909061057264547 US Open Ttennis Rafael Nadal reach semifinal SECVPF
201909061057264547 US Open Ttennis Rafael Nadal reach semifinal SECVPF

கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் முதலாவதாக நடைபெறும் ஆஸ்திரேலியா ஓபன் தற்போது நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான காலிறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் தலைசிறந்த வீரரும், 2-ம் நிலை வீரரான ரபேல் நடால், 4-ம் நிலை வீரரான ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ்-ஐ எதிர்கொண்டார்.

இதில் முதல் செட்டை ரபெல் நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டையும் 6-2 எனக் கைப்பற்றினார். இதனால் நடால் எப்படியும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வீறுகொண்டெழுந்த சிட்சிபாஸ் நடாலுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். இருவரும் அடுத்தடுத்து கேம்ஸ்களை கைப்பற்ற 3-வது செட் டைபிரேக்கர் வரை சென்றது. இறுதியில் சிட்சிபாஸ் 7(7)-6(4) என 3-வது செட்டை கைப்பற்றினார். அந்த வேகத்தோடு 4-வது செட்டையும் 6-4 எனக் கைப்பற்றினார்.

வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டில் இருவரும் ஆக்ரோஷமாக விளையாடினார். என்றாலும் சிட்சிபாஸ் கையே ஓங்கியது. 5-வது செட்ட 7-7 எனக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.

முதல் இரண்டு செட்டுகளையும் கைப்பற்றி போட்டியில் வெற்றி பெற முடியாத ஏமாற்றத்தோடு ரபேல் நடால் வெளியேறினார்.