இலங்கையின் வெற்றிக்கு ஒரு வடிவமைப்பு அவசியம்

mikkyarther
mikkyarther

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மிக்கி ஆர்தர் பதவியேற்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

அதன் போது மிக்கி ஆர்தர் கருத்து தெரிவிக்கையில்;

இலங்கை அணியில் திறமைகள் அதிகமாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால், அவர்களுக்கு அவர்களின் திறமையினை பாவிக்க வேண்டிய தருணத்தில் சந்தர்ப்பத்தில் அதனை பாவிக்கும் விதத்தினைக் கற்று கொடுப்பது எனக்கு ஆர்வத்தினை ஏற்படுத்துகின்றது.

எனது தாரக மந்திரம் கடினமான உழைப்பாகும்.

நான் இலங்கை வீரர்களின் உடற்தகுதியினை கண்டு வியப்புக்கு உள்ளாகியிருக்கின்றேன்.

எங்களுக்கு எப்போதும் முன்னேற முடியும். நாங்கள் உலகில் சிறந்த வீரர்கள் தயராகுவது போன்று தயராகுவோம்.

அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள T20 உலகக் கிண்ணத்திற்கு எங்களுக்கு இன்னும் 8 மாதங்களே இருக்கின்றன. இவ்வாறான நிலையில் அடுத்த ஜனவரியில் இந்திய கிரிக்கெட் அணியுடன் இடம்பெறும் T20 தொடர் எமக்கு மிக முக்கியமானது.

எங்களுக்கு அவுஸ்திரேலியாவில் வெற்றிகரமாக மாற ஒரு சிறந்த வடிவமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அந்த வடிவமைப்பிற்கு கீழ் எங்களது வீரர்களை கொண்டு வர வேண்டி இருப்பதோடு, சரியான அணித்தேர்வு மூலம் அவர்களுக்கான பொறுப்புக்களையும் தெளிவாக வைத்திருக்க வேண்டும்.

அவுஸ்திரேலியா உண்மையில் கிரிக்கெட் விளையாட கடினமான ஒரு இடம். ஆனால், நாம் அங்கே போட்டியிடக்கூடிய ஒரு வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மிக்கி ஆர்தரின் நியமனத்தோடு இலங்கை கிரிக்கெட் சபை, இன்னும் 5 பேரின் புதிய நியமனங்களையும் அறிவிப்புச் செய்திருந்தது.

  • கிரான்ட் ப்ளவர் – தேசிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் மற்றும் இலங்கை A கிரிக்கட் அணியின் தலைமைப் பயிற்சியாளர்
  • டேவிட் சேக்கர் – தேசிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்சியாளர்
  • சேன் மெக்டர்மட் – தேசிய கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளர்
  • ஜெரோமேம் ஜயரத்ன – கிரிக்கெட் விடயங்களுக்கான சிரேஷ்ட உத்தியோகத்தர்
  • டிம் மெக்கஸ்கில் – தேசிய கிரிக்கெட் அணியின் விருத்தி தலைமைப் பொறுப்பாளர்