அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நோவாக் ஜோகோவிக்!

skysports novak djokovic tennis 5272209
skysports novak djokovic tennis 5272209

ரஷ்ய வீரரான அஸ்லான் கரட்சேவை வீழ்த்தி அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நோவாக் ஜோகோவிக்.

அவுஸ்திரேலிய அரையிறுதியின் மூன்று செட்களையும் 6-3, 6-4, 6-2 என்ற கணக்கில் வெற்றி கொண்டதன் மூலமே செர்பிய வீரர் ஜோகோவிக் தனது வெற்றியை உறுதி செய்துகொண்டார்.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் டெனில் மெட்வெடேவ் அல்லது ஸ்டீபனோஸ் ஆகியோரில் ஒருவரை ஜோகோவிக் சந்திக்கவுள்ளதுடன் இதில் வெற்றி பெற்றால் ஏற்கனவே தன்வசமுள்ள சாதனையை முறியடித்து 9 ஆவது முறையாகவும் இந்த தொடரை வெற்றி கொண்ட பெருமைக்குரியவராவார்.