இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வேகப் பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம்!

03b30003f91671c4e6ff6b1a50de4634 XL 1
03b30003f91671c4e6ff6b1a50de4634 XL 1

மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப் பயணத்திற்கான இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய வேகப் பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட காரணங்களைக் கூறி வேகப் பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய டேவிட் சாகருக்கு பதிலாக இலங்கை அணியின் முன்னாள் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் சமிந்த வாஸை பெயரிடுவது குறித்து உயர் அதிகாரிகள் விவாதித்து வந்தனர்.

டேவிட் சாகர் வியாழக்கிழமை (பிப்ரவரி 18) உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியை இராஜினாமா செய்தார்.