அவுஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற இவான் டோடிக் மற்றும் பிலிப் பொலசெக்!

mr2avb9g ivan dodig filip polasek afp 625x300 21 February 21
mr2avb9g ivan dodig filip polasek afp 625x300 21 February 21

இவான் டோடிக் மற்றும் பிலிப் பொலசெக் ஆகியோர் அவுஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை வென்றனர்.

அவுஸ்திரேலிய ஓபன் ஆண்கள் இரட்டையர் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ராஜீவ் ராம் மற்றும் ஜோ சாலிஸ்பரி ஆகியோரை 6-3, 6-4 என்ற செட் கணக்கில் தோற்கடித்து அவர்கள் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியுள்ளனர்.

2018 ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற 35 வயதான போலசெக்கிற்கு இது முதல் கிராண்ட்ஸ்லாம் வெற்றியாகும். அதே நேரத்தில் குரோஷியாவின் டோடிக், மார்செலோ மெலோவுடன் 2015 பிரெஞ்சு ஓபனை வென்ற பிறகு தனது இரண்டாவது ஆண்கள் இரட்டையர் பட்டத்தை வென்றார்.