ரி -20 உலகக் கிண்ணத்தை எமிரேட்ஸுக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்துவோம்-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர்!

EuqDn5yUUAARAqB
EuqDn5yUUAARAqB

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ரி -20 உலகக் கிண்ணத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்துவோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் கூறியுள்ளார்.

7 ஆவது ஐ.சி.சி. ரி -20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டி ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இந் நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் எஹ்சன் மணி, லாகூரில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும்போது,

ரி -20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க வேண்டும் என்றால் விசா வழங்குவதில் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை இந்தியா எங்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் வழங்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்திடம் கூறியுள்ளோம்.

வீரர்களுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தான் ரசிகர்கள், நிர்வாகிகள், பத்திரிகையாளர் ஆகியோருக்கும் விசா கொடுப்பதில் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் வேண்டும்.

இதை இந்தியா செய்ய தவறினால் அதன் பிறகு நாங்கள் இந்த போட்டியை இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு மாற்றக்கோரி அழுத்தம் கொடுப்போம் என தெரிவித்துள்ளார்.