கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை அணியின் இரண்டாவது வீரர்!

1601904525 corona 2
1601904525 corona 2

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப் பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளதாக இன்றைய தினம் கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான இலங்கை அணியின் இரண்டாவது வீரர் இவர் ஆவர்.

இலங்கை அணியானது மேற்கிந்தியத்தீவுகள் சுற்றுப் பயணத்துக்கான ஆயத்தங்கள் இறுதித் தருவாயில் உள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

முன்னதாக லஹிரு திரிமான்ன கொரோனா தொற்றுக்குள்ளாகி வெற்றிகரமாக அதிலிருந்து மீண்டு வந்தார்.

இந் நிலையில் தற்சமயம் லஹிரு குமார கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமையினால், அவருக்கு பதிலாக வேகப் பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலை அணியில் உள்வாங்குவதற்கும் வாயப்புகள் உள்ளன.

ஏனைய வீரர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், அந்த முடிவுகள் இன்றிரவு கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.