மேற்கிந்தியத்தீவுகளை நோக்கி புறப்பட்ட இலங்கை கிரிக்கெட் அணி!

153630598 4689381347759702 48743100199466085 o
153630598 4689381347759702 48743100199466085 o

மேற்கிந்தியத்தீவுகளுடான முத்தரவு கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணியானது இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

அவர்கள் கட்டார் ஏயர்வேஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான கியூ.ஆர் -669 என்ற விமானத்தினூடாக கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 3.35 மணிக்கு புறப்பட்டுள்ளனர்.

குறித்த விமானத்தின் மூலமாக கட்டாரின் தோஹாவைச் சென்றடையும் இலங்கை அணியானது, அங்கிருந்து மற்றொரு விமானத்தினூடாக மேற்கிந்தியத்தீவுகளை சென்றடையும்.