400 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்த அஷ்வின்!

Ravichandran Ashwin PTI
Ravichandran Ashwin PTI

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் நேற்று தொடங்கியது. 30 விக்கெட்டுகளில் 28 விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்த போட்டி இரண்டு நட்களிலேயே முடிவடைந்தது.

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டும் வீழ்த்தினார்.

2-வது இன்னிங்சில் ஜாஃப்ரா ஆர்ச்சரை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் 400 விக்கெட் வீழ்த்தி அஷ்வின் சாதனை படைத்துள்ளார்.