அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த யூசுப் பதான்!

1614350137756
1614350137756

இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் இர்பான் பதான். இவரது சகோதரர் யூசுப் பதான். அதிரடி ஆட்டம் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார்.

இரண்டு முறை உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். கொல்கத்தா அணி இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இருந்தார். அதேபோல் 2008-ம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வெல்லும்போது அந்த அணியில் இடம் பிடித்திருந்தார்.

இவர் தற்போது அனைத்து வடிவிலான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.