சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற வினய் குமார்!

Vinay Kumar 2021 02 26
Vinay Kumar 2021 02 26

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார். 37 வயதான இவர் கடந்த 2010-ம் ஆண்டு மே 11-ஆம் திகதி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். மே 28-ஆம் திகதி ஒருநள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகம் ஆனார்.

கடந்த 2012-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இந்த ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடினார்.

இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் முதல்தர கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 31 ஒருநாள் போட்டியில் 38 விக்கெட்டுகளும், 9 டி20 போட்டியில் 10 விக்கெட்டுகளும், 1 டெஸ்ட் விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.