இந்திய கால்பந்து அணி தலைவர் சுனில் சேத்ரிக்கு கொரோனா தொற்று உறுதி!

s270
s270

இந்திய கால்பந்து அணி, துபாயில் நடைபெறும் சர்வதேச நட்புறவு போட்டிகளில், ஓமன் (மார்ச் 25) மற்றும் ஐக்கிய அரபு அமீரக (மார்ச் 29) அணிகளை எதிர்த்து விளையாட உள்ளது. இதற்கான பயிற்சி முகாம் துபாயில் வரும் 15ம் திகதி தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் தலைவரும், நட்சத்திர ஆட்டக்காரருமான சுனில் சேத்ரிக்கு (வயது 36) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர் 25ம் திகதி நடக்கும் போட்டியில் இருந்து நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் 29ம் திகதி ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் பங்கேற்பது சந்தேகம்தான்.

சுனில் சேத்ரி தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். அதேசமயம், தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் விரைவில் கால்பந்து களத்திற்கு திரும்புவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.