உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்களை சிறப்பிக்கும் முகமாக வெளியிடப்பட்ட முத்திரைகள்!

015
015

இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத்தை வென்று 25 ஆண்டுகள் நிறைவுக்கான உத்தியோகபூர்வ விழா நேற்று (17.03.2021) அலரிமாளிகையில் நடைபெற்றபோது உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் வீரர்களை சிறப்பிக்கும் முகமாக முத்திரைகள் வெளியிடப்பட்டன.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 14 பேரினதும் தபாற்தலைகளும், உலகக் கிண்ண இறுதிப்போட்டியின்போது அர்ஜுன ரணதுங்க வெற்றிக்கான ஓட்டத்தை அடித்த சந்தர்ப்பம் ஆகியவற்றை நினைவுகூரும் விதமான முத்திரைகள் வெளியிடப்பட்டன.

இதில் 25 ரூபா பெறுமதியான வெற்றி ஓட்டத்தை பெறும் அர்ஜுனவின் படம் பொறித்த முத்திரையானது கிவ். ஆர். முறையில் வெளியிடப்பட்ட இலங்கையின் முதலாவது முத்திரை என்ற சிறப்பை பெற்றிருப்பது முக்கிய அம்சமாகும்.

முதலாவது முத்திரை மற்றும் உலகக் கிண்ண இலங்கையின் ஜேர்ஸியை நினைவுகூரும் தபால் உரை தபால் திணைக்கள தலைவர் ரஞ்சித் ஆரியரட்ன, வெகுசன ஊடக அமைச்சர் கெஹேலிய ரம்புக்கவெல்லவிடம் கையளிக்க, அந்த முத்திரைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் உலகக் கிண்ணத்தை வென்ற அணியின் தலைவரான அர்ஜுன ரணதுங்க ஆகியோருக்கு அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.