விளையாட்டு வீரர்களை பதிவதற்கான இறுதித் திகதி இன்று

download 7 7
download 7 7

33வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா – 2021 இணையவழி பதிவு  ஆரம்பித்துள்ள நிலையில் அதன் இறுதித் திகதி இன்று ஆகும் எனவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள் உடன் பதிவுசெய்து கொள்ளவும்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினுடாக வருடாந்தம் நடைமுறைப்படுத்தப்படும் இளைஞர் விளையாட்டு விழா இம்முறை முதல்தடவையாக இணையவழி மூலம் பதிவு மேற்கொண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாட்டிலுள்ளள சகல இளைஞர் யுவதிகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் திறந்த இணையவழி பதிவிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இவ் வாய்ப்பினுடாக இளைஞர் கழக அங்கத்தவர்கள் அல்லாதவர்களும் இணையவழி இல் பதிவு செய்து போட்டியில் பங்குகொள்ள முடியும்.

அவ்வாறு இணையவழியில் பதிவு செய்துவிட்டு பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தரை சந்தித்து பதிவினை மேற்கொண்ட விடையத்தை தெரிவிப்பதுடன் இளைஞர் கழக அங்கத்துவம் இல்லாதவர்கள் தமது அங்கத்துவத்தையும் இளைஞர் சேவை உத்தியோகத்தரிடம் பெற்றுக்கொள்ள வேண்டும்
பிரதேச குழு மற்றும் தடகள போட்டிகளில் கலந்துகொள்ளும் வீர வீராங்கனைகள் கீழ்வரும் இணைப்பினைப்பயன்படுத்தி பதிவுகளை இணையவழி மூலம் சுயமாக மேற்கொள்ள முடியும்.

http://www.nyscsports.lk/