ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புவனேஷ்வர் குமார் 11-வது இடத்திற்கு முன்னேற்றம்!

text 101593229564
text 101593229564

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அபாரமாக பந்து வீசினார். கடைசி போட்டியில் 42 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.

மொத்தமாக 3 போட்டியிலும் 6 விக்கெட் வீழ்த்தினார். 29 ஓவரில் 174 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். சராசரி 22.50 ஆகும். காயத்தில் இருந்து குணமாகி மீண்டும் களத்திற்கு திரும்பிய புவனேஷ்வர் குமார் முதல் தொடரிலேயே அசத்தினார்.

இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிசையில் 9 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளார்.