முதல் இன்னிங்ஸ் முடிவில் முன்னிலையில் உள்ள மேற்கிந்திய தீவுகள் அணி!

Capture 5 720x450 1
Capture 5 720x450 1

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இடம்பெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் சகல விக்கெட்களை இழந்து 354 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்ப்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்ப்பில் லஹிரு திரிமாண்ண 55 ஓட்டங்களையும், பெதும் நிஸ்ஸங்க 51 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 96 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.